Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதய கிரிக்கெட் உலகில் டி-20 தொடர்கள் அதிகம் முளைத்துள்ளன. அதாவது கிரிக்கெட் விளையாடாத நாடுகள் கூட டி-20 லீக் தொடரை நடத்தி கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டிவிட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த டி-20 லீக் தொடர் நடைபெறாமல் இருந்த மாதமே கிடையாது. ஜனவரி முதல் டிசம்பர் வரை உலகின் ஒவ்வொரு மூலையிலும் டி-20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த டி-20 தொடர்களில் முதன்மையானது  ஐபிஎல் தொடர் தான். காரணம் ஐபிஎல் தொடரின் விதிமுறை, வீரர்கள் ஏலம், பரிசுத்தொகை, அனுபவம் போன்றவை பலமாக உள்ளது. இதனால் தான் ஐபிஎல் தொடர் முதன்மையாக உள்ளது. தற்பொழுது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய டி-20 தொடரான பிக் – பாஷ் தொடர் ஐபிஎல்-லை பின்னுக்குத் தள்ள பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி 4 ஆண்டுகளாக இருந்தாலும் ஐபிஎல் தொடர் மலையின் உச்சியில் பயணிக்கிறது. பிக் பாஷ் லீக் சரிவில் தான் பயணித்து வருகிறது.

Categories

Tech |