பொதுவாக ஆடு, மாடு போன்ற கால்நடைகள் புல், வைக்கோல் உள்ளிட்ட தீவனங்களை தான் உண்ணும். ஆனால் இப்போது உள்ள கால்நடைகள் காகிதம், பிளாஸ்டிக் போன்றவற்றை சாப்பிட்டு பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. நகரமயமாதல் காரணமாக பல இடங்கள் குப்பை கிடங்குகளாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால் பூமி பாதிக்கப்படும் என்று எவ்வளவு விழிப்புணர்வுகள் வந்தாலும் அதன் பயன்பாடு குறைவதாக தெரிவதில்லை. பிளாஸ்டிக்கால் அதிகம் பாதிக்கப்படுவது கால்நடைகள் தான். இதனால் அவை உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் சூழ்நிலை கூட ஏற்பட்டு விடுகிறது.
அந்தவகையில் பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் போடுவதால் கால்நடைகள் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை சந்திக்கின்றன என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். கடந்த சில நாட்களாக உடல் வலியால் அவதிப்பட்டு வந்த மாடு ஒன்று வலி தாங்காமல் கண்ணீர் விட்டுள்ளது, அதன் பின்பு மருத்துவர்கள் வந்து பரிசோதித்த போது வயிற்றில் உள்ளே சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின் அவர்கள் ஆப்ரேஷன் செய்து மாட்டின் வயிற்றில் உள்ள 50 கிலோ பிளாஸ்டிக் வெளியே எடுத்தனர். கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களே…! நாம் இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களை கீழே போடுவதால் வாயில்லா ஜீவன்கள் அதை சாப்பிட்டு அவதிக்கு உள்ளாகின்றன. எனவே இனியாவது நான் பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் போட்டு வைக்காமல் இருப்பது நல்லது.
https://youtu.be/5RpDBeaujGA