Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் ஐடி துறை பெயர் மாற்றம்…. புதிய பெயர் இதுதான்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி தகவல் தொழில்நுட்ப துறை, “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை”என்று  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இனி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

மேலும் வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பங்களில் தொடக்கநிலைநிறுவனங்கள் மூலம், புதுமைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஒன்று சென்னையில் அரசால் நிறுவப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |