Categories
மாநில செய்திகள்

10 லட்சம் பேரை கொண்ட…… “சன்யாச படையை உருவாக்குவேன்”…. நித்யானந்தா வெளியிட்ட வீடியோ…..!!!!

சாமியார் நித்தியானந்தா மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி குரு பூர்ணிமா அன்று சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்நிலையில் நித்யானந்தா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10 லட்சம் பேரை திரட்டி சன்யாச படையை உருவாக்கியே தீருவேன் என சபதமிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். அந்த வீடியோவில் எனக்கு வயசு 44 ஆகிறது. நான் சாதிக்காததுமில்லை சந்திக்காதாதுமில்லை. பல பிரச்னைகளை சந்திப்பதால் ஒருவித ஷிரத்தன்மை என்னுள் வந்துள்ளது.

ஒரு தலைவனுக்கு வலி தாங்கும் தன்மைதான் வலிமை. 10 லட்சம் பேரை சேர்ந்த சன்யாச படை நான் உருவாக்கி பரமேஸ்வரன் பாதத்தில் சமர்பித்தே தீர்வேன். பரமசிவன் அருளால் இதை செய்து முடிப்போம் என்றுள்ளார். நித்யானந்தாவின் இந்த வீடியோவும் பல கமெண்ட்களையும் பெற்று வருகிறது.

Categories

Tech |