Categories
மாநில செய்திகள்

திருமணமாகாமல் கர்ப்பம்….. கருக்கலைப்பை மறுக்க முடியாது….. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…..!!!!!

மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்ததால் கர்ப்பமானார். அவர் தனது 20 வார கருவை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், கருக்கலைப்பு சட்டத்தின் 3வது பிரிவில் பார்ட்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர கணவர் என குறிப்பிடப்படவில்லை.

இதன் பொருள் திருமணமாகாத பெண்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். எனவே மனுதாரர் திருமணம் ஆகாததை காரணம் காட்டி கருக்கலைப்பை மறுக்க முடியாது. மனுதாரரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை குழுவின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தனர்.

Categories

Tech |