Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விலகல் குழப்பத்தில் ஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட்

ஆசியக் கண்டத்தை கொரோனோ வைரஸ்  நடுங்க வைத்து வருவது போல  ஆஸ்திரேலிய கண்டத்தை காட்டுத்தீ ஆட்டிப்படைத்து வருகிறது.  ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எரிய ஆரம்பித்த இந்த காட்டுத்தீ 7 மாதங்களாக இன்னும் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.  குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங் களில் காட்டுத்தீ ஜெட் வேகத்தில் பரவி அதிக சேதத்தை ஏற்படுத்தியது. உயிர்ச்சேதம் அதிகம் (28 பேர்) இல்லை யென்றாலும் 60 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பு காட்டுத்தீ-க்கு இரையாகி யுள்ளன. ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகின. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின. மேலும், ஆஸ்திரேலியாவின் முக்கிய மாநகரங்களான கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்கள் காற்று  மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது.

இந்த காட்டுத் தீயில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டு வதற்காகப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கண்காட்சி கிரிக்கெட் போட்டி புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்கிற பெயரில் நடைபெறுகிறது. ரிக்கி  பாண்டிங் தலைமையிலான ஒரு அணி யும், ஷேன் வார்னே தலைமையிலான அணியும் என 2 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் அணிக்கு சச்சினும், வார்னே அணிக்கு கோர்ட்னி வால்ஷும் பயிற்சியாளராகச் செயல்பட உள்ளனர். இந்த போட்டி வரும் 8-ஆம் தேதி நடைபெற விருந்த நிலையில், அன்றைய தினம் போட்டி நடைபெறவிருக்கும் சிட்னியில் மழை  பெய்யக்கூடிய அறிகுறிகள் உள்ளதால் 9-ஆம் தேதி மெல்போர்னுக்கு மாற்றப் பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டியின் தேதி திடீரென மாற்றப்பட்டதால் ஷேன் வார்னே  இந்த போட்டியிலிருந்து விலகு வதாக அறிவித்துள்ளார். கில்கிறிஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட வால்ஷ், வீரராகக் களமிறங்குகிறார் என்பதால் பயிற்சியாளராக டிம் பெயின் இருப்பார் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதே போல மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹஸ்ஸி போன்ற சில வீரர்களும் விளக்கியுள்ளதால் ஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் குழப்பத்தில் உள்ளது.

Categories

Tech |