சென்னை திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய், சாத்தாங்காடு, மணலியில் காமராஜ் சாலை, மாதவரத்தில் சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், தண்டையார் பேட்டையில் வடக்கு அவென்யூ சாலை, வியாசர்பாடி, மகாகவி பாரதியார்நகர், ராயபுரத்தில் கால்நடை டிப்போ, சூளை, அவதான பாப்பையா சாலை, திரு.வி.க.நகரில் ஜமாலியா பழைய லாரி நிலையம், பெரம்பூர் நெடுஞ்சாலை, அம்பத்தூரில் மாணிக்கம் பிள்ளை தெரு, அண்ணா நகரில் செனாய் நகர், முதல் பிரதான சாலை, தேனாம் பேட்டையில் லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கத்தில் குருசிவா தெரு எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கத்தில் நடராஜன் சாலை சந்திப்பு, பாரதி சாலை, ஆலந்தூரில் கிருஷ்ணா நகர் பிரதான சாலை, ஒத்தவாடை, மயானபூமி அருகில், அடையாறில் வேளச்சேரி மயானபூமி, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில், பெருங்குடியில் 200 அடி ரேடியல் சாலை, குப்பை கொட்டும் வளாகம், சோழிங்கநல்லூரில் கங்கை அம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம் ஆகிய 15 இடங்களில் மட்டுமே கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை மீறி பொதுயிடங்களில் 1 டன் அளவுக்கு குறைவான கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரமும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூபாய்.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்” என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Categories