நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நாடாளுமன்ற எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் இருக்கின்றனர். இவர்களோடு திமுக எம்பி திருச்சி சிவாவும் டெல்லியில் உள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories