Categories
தேசிய செய்திகள்

செக் மோசடி வழக்குகளில் மேல்முறையீட்டை ஏற்கக் கூடாது

செக் மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் விடுதலை செய்யப்பட்டால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரணைக்கு ஏற்க வேண்டாம் என்று, மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் மேல்முறையீட்டை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து முடிவு எடுக்க நீதிபதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் நீதிபதிகள்  இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவில், மேல்முறையீட்டு மனுக்களை மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்கக்கூடாது.  ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விசாரித்து இருந்தாலும், அந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

Categories

Tech |