குறுக்கே நாய் பாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து தம்பதி காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கணவன், மனைவி இருவரும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் வெள்ளமடம் கிறிஸ்து நகர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே சென்றது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.