நாட்டின் முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் இன்றைய மிகப்பெரிய முக்கிய பிரச்சனையான வேலையின்மை குறித்து மக்களவையில் பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மாறாக காங்கிரஸ் குறித்தும், நேரு குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் மோடி பேசுகிறார்.
முக்கிய பிரச்சனைகளிலிருந்து நாட்டை திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை. முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மிக நீண்ட உரையை நிகழ்த்தினார். ஆனால் அவரும் வேலையின்மை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.