பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 19 அவகாசம் முடியவிருந்த நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சீட் இல்லை எனக்கூறி எந்த தனியார் கல்லூரியும் சேர்க்கையை மறுக்கக் கூடாது என்றும், மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை எச்சரித்துள்ளது. மேலும் “அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 27-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் CBSE மாணவர்களுக்கும் சேர்க்கையை உறுதி செய்திட வேண்டும்” என்று உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.