Categories
தேசிய செய்திகள்

இனி ஆண், பெண் பள்ளிகள் கலப்பு பள்ளிகளாக மாற்றம்?… மாநில அரசு அதிரடி….!!!!

பண்டைய காலக்கட்டத்தில்தான் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பேசக்கூடாது, ஒன்றாக பழககூடாது என பிரித்து வைத்திருந்தனர். அத்துடன் பெண்கள் சௌகரியமாக உணரவேண்டும் என்பதற்காக அவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து நாளைடைவில் பெண்கள் மட்டுமே பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில்தான் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்களும் விரும்ப ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பேச வாய்ப்பே கிடைக்காமல் ஒன்றாக பழகாமல் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற காரணமாக அமைகிறது.

இதற்கிடையில் குழந்தைகளை வளர்க்கும்போதே பாலின வேறுபாடுகள் காட்டாமல் ஒரேமாதிரியாக தான் வளர்க்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறினாலும் ஆண், பெண் என்ற பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. கேரள மாநிலத்தில் 280 பெண்குழந்தைகள் மட்டும் பயிலும் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் இந்த பாகுபாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படக் கூடாது. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக கல்வி கற்கும்படியான சூழலை ஏற்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்போது தனித்தனியாக இயங்கிவரும் ஆண், பெண் பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்றி உடனே இணைக்கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பள்ளிகளில் ஆண், பெண் மாணவர்களுக்கான கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் இணைக் கல்வியின் அவசியம் தொடர்பாக பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த கல்வியாண்டு முதல் இணைக் கல்வியை தொடங்குவதற்கான வேலைப்பாடுகளை 90 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |