Categories
உலக செய்திகள்

திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல்… ட்ரம்ப் மீது விசாரணைக்குழு குற்றச்சாட்டு…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல்களை திட்டமிட்டு மேற்கொண்டதாக விசாரணைக்குழுவினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு எப்போதும் நடக்காத அளவில் ட்ரம்ப்-ன் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்களை மேற்கொண்டனர். நாட்டில் அதிபர் தேர்தல் முடிந்த பின் நாடாளுமன்ற பணியாளர்கள் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து சான்று அளிக்க தயாராகிக்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், திடீரென்று டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் விசாரணை குழு, ட்ரம்ப் திட்டமிட்டு அந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை ட்ரம்ப் வீட்டிலிருந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்து ரசித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

Categories

Tech |