கொலை முயற்சி வழக்கில் கைதான நபரின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு சிவசுப்பிரமணி வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணி தன்னுடைய மாமியாரை அரிவாளால் முதுகில் வெட்டினார். இது தொடர்பாக சிவசுப்பிரமணி மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசுப்பிரமணிக்கு கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிவசுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சிவசுப்பிரமணியனின் மாமியார் தன்னுடைய மருமகனை மன்னிப்பதாக கூறி தண்டனையை ரத்து செய்யும்படி நீதிபதியிடம் கூறினார். அதன் பிறகு தன்னுடைய மருமகன் மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனவும், குழந்தைகளின் எதிர்காலம் கருதியும் மருமகனை மன்னிப்பதாக மாமியார் கூறினார். இதன் காரணமாக நீதிபதி சிவசுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.