இந்தியாவிலுள்ள சில குறிப்பிட்ட முன்னணி வங்கிகள் வாட்ஸ் அப் வாயிலாகவே எளிமையாக பணம் பரிவர்த்தனைகளை செய்துகொள்ளும்படியான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் பாரத ஸ்டேட்வங்கி(SBI) வாட்ஸ் அப் பேங்கிங் சேவையை இப்போது தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் வாயிலாகவே பணப் பரிவர்த்தன சேவைகள் வழங்கப்பட்டு இருப்பதால் வேறு எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. மேலும் வாட்ஸ்அப்லேயே பேங்க் பேலன்ஸ் தொடர்பான விபரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
அதன்படி, எஸ்பிஐ வங்கியின் வாட்ஸ்அப் வங்கி சேவைகளை தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள் +919022690226 என்ற எண்ணில் “ஹாய்” என குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். அத்துடன் வங்கி பணபரிமாற்றம், அக்கௌன்ட் பேலன்ஸ் தவிர்த்து வேறென்ன சேவைகள் கிடைக்கும் என்பதை இன்னும் எஸ்பிஐ வங்கி வெளியிடவில்லை. அதன்பின் எஸ்பிஐ வங்கியின் கணக்கை பதிவு செய்யவில்லையெனில் முதலாவதாக வங்கியுடன் இணைக்கப்பட்ட எண்ணுடன் வாட்ஸ் அப்பில் SBI வங்கிச் சேவைகளை பெறுவதற்கு ஒப்புதல் வாங்கவும்.
இப்போது எப்படி எஸ்பிஐ கணக்கை வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளில் பதிவுசெய்வது மற்றும் பேலன்ஸ் தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். முதலாவதாக வங்கியுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணிலிருந்து 917208933148 என்ற எண்ணிற்கு SMS WAREG A/c என அனுப்பவும். அதனை தொடர்ந்து +919022690226 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ SBI என அனுப்பவேண்டும். பின் கணக்கு இருப்பு, சிறு அறிக்கை, வாட்ஸ்அப் வங்கியில் இருந்து பதிவுநீக்கம் போன்றவற்றிலிருந்து ஒன்றை தேர்வுசெய்து அக்கௌன்ட் பேலன்ஸ் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.