Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு….. வரும் ஜூலை 27 வரை அவகாசம்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

பொறியியல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி மாணவர்களுக்கு இடம் இல்லை என எந்த தனியார் கல்லூரியும் கூறக்கூடாது எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.  cbseresults.nic.in  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தாமதமானது. இந்நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |