Categories
வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் சூப்பரான வேலை….. 10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

ரயில்வே துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான சூப்பர் அறிவிப்பை சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறை ஆனது வெளியிட்டுள்ளது.

பணி: Wireman, Computer Operator And Programming Assistant

காலிப்பணியிடங்கள்: சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள Wireman, Computer Operator And Programming Assistant ஆகிய பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Wireman பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Computer Operator And Programming Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ரயில்வே துறை வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Southern Railway உதவித்தொகை :
Wireman பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000/- முதல் ரூ.7,000/- வரை மாத உதவித்தொகையாக பெறுவார்கள்.
Computer Operator And Programming Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.

ரயில்வே துறை தேர்வு முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Southern Railway விண்ணப்பிக்கும் முறை:
இந்த ரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62d8d941a7fd254fc84e7b62

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62d8d7c5a7fd254eb965080c

Categories

Tech |