இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற இருக்கிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றதால் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார். அதன் பிறகு துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மேட்சில் இருந்து ஜடேஜா விலகுவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஜடேஜாவின் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு நாள் தொடர் முடிவடைந்த பிறகு வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஜடேஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவர் அறிக்கை அளித்த பிறகே அவர் போட்டியில் விளையாடுவது உறுதிப்படுத்தப்படும்.