Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பத்மநாபபுரம் கோட்டை சுவர்” மரம், செடிகளை அகற்றும் பணி தீவிரம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பத்மநாபபுரம் கோட்டை சுவரில் வளர்ந்து நிற்கும் செடி மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றிலும் கம்பீரமான கல்கோட்டை சுவர் அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாக பத்மநாபபுரம் ஆர்.சி தெரு பக்கமுள்ள சுவரின் ஒரு பாகம் இடிந்து விழுந்தது. மேலும் கோட்டை சுவரின் மீது வளர்ந்து நின்ற மரம் சுவரை பெயர்த்து கொண்டு வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

நேற்று மதுரை பொதுப்பணித்துறை ஹெரிடேஜ் பிரிவு மூலம் சுவரை ஒட்டி வளர்ந்து நிற்கும் செடி மற்றும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். கோட்டை சுவரில் இருக்கும் செடி, மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |