Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொக்லைன் எந்திரம் மூலம்…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. எச்சரிக்கை விடுத்த நெடுஞ்சாலைத்துறையினர்….!!

சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பேருந்து நிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனைதொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்துநிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் திண்டுக்கல் சாலை, புதுதாராபுரம் சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |