பாகிஸ்தான் நாட்டில் ஏழு மணி நேரங்களாக தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரத்தில் தொடர்ந்து ஏழு மணி நேரங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. பலத்த மழையானது 238 மிமீ-ஆக பதிவானது. அந்நாட்டில் 20 வருடங்களில் இல்லாத வகையில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்ததாக கூறப்பட்டிருக்கிறது.
இதனால் அந்த நகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளின் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், சாலைகளிலும் அதிகமான மழை நீர் ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. பலத்த மழை மற்றும் காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.