உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் whatsapp இல் புதிதாக இரண்டு அப்டேட்டுகள் அறிமுகமாகியுள்ளது. முதலாவது இனிமேல் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கும், ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கும் வாட்ஸ் அப் சாட் ஹிஸ்டரியை மாற்றிக் கொள்ளலாம். இரண்டாவதாக ஒருவர் அனுப்பும் செய்திக்கு ஐந்து எமோஜிகள் மட்டும் வைத்து ரியாக்ட் செய்யலாம் என்று இருந்தது. ஆனால் இனி அனைத்து எம்மோஜிகள் வைத்து ரியாக்ட் செய்யும் வசதி அறிமுகம் ஆகி உள்ளது.