செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிப்பேட்டை பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகள் நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ளது. இந்த இடத்தில் பல வருடங்களாக சோலையப்பன் என்பவர் 9 கடைகள் கட்டி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் சோலையப்பன் கடைகளுக்கு சில ஆண்டுகளாக முறையான வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதனைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் சங்கர், கோவில் செயல் அலுவலர் சபரீஸ்வரி, தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான அந்த 9 கடைகளுக்கு பூட்டி சீல் வைத்துள்ளனர்.