தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் ரயில் 1 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
மதுரை மாவட்டத்தில் இருந்து நேற்று காலை தேனிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. காலை 8.30 மணியளவில் ரயில் செக்கானூரணி அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாறைப்பட்டியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் எஞ்சின் டிரைவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்ததால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1 1/2 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு விரிசல் ஏற்பட்ட பகுதியில் மெதுவாக ஊர்ந்து சென்றது.