பிரபல நாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுப்பதற்காக தெருக்களில் ராணுவத்தினர் பீரங்கிகளோடு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சீன நாட்டில் உள்ள ஹேனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்குள் பணத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப் படாததால், ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதி தெருக்களில் ராணுவத்தினர் பீரங்கிகளோடு நிறுத்தப்பட்டுள்ளனர். இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் பணி படிப்படியாக நடைபெறும் என வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989-ம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்தை காவல்துறையினரால் சமாளிக்க முடியாததால், ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டனர். அதன்பிறகு மாணவ-மாணவிகளின் போராட்டம் ஆனது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியதால், ராணுவத்தினர் பீரங்கிகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகளை தாக்கினர். இதன் காரணமாக ஏராளமான மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். இது சீன வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாக கருதப்படுகிறது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலைகளால் வங்கிகளை வாடிக்கையாளர்களிடமிருந்து காப்பதற்காக ராணுவத்தினர் களமிறக்கப்பட்டது மேற்கண்ட சம்பவத்தை நினைவுபடுத்துவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.