ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்களுக்கு கேளிக்கையில் மனம் ஈடுபடத் தூண்டும். கெட்ட சகவாசங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.