இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடலோர மாநிலங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும், துறைமுக கடல் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் நேற்று (பிப். 06) படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒத்திகைக்காக பயங்கரவாதிகள் போல் வேடமிட்டிருந்த ஏழு காவலர்கள் நாகை துறைமுகம் அருகில் வந்தபோது, அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் பயங்கரவாதிகள் போர்வையில் கடலோரப் பகுதிகளில் சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது . இதையடுத்து பயங்கரவாதிகள் போர்வையில் விசைப்படகில் வேடமிட்டு வந்த காவலர்களை, கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்தனர்.