மகரம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
எதிர்மறை எண்ணங்களும் பாதுகாப்பற்ற உணர்வும் உண்டாகும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைய முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் சில அசௌகரியங்களை உணர்வீர்கள். சக பணியாளர்களுடன் பழகுவதில் சில பிரச்சனைகள் ஏற்படும். இன்று உங்களின் காதலுக்கு உகந்த நாளல்ல. உங்களின் காதலை வெளிப்படுத்துவதில் சில சிக்கல்கள் காணப்படும்.
தேவையற்ற செலவினங்களுக்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது. பணத்தைக் கையாளுவதில் சிரமம் காணப்படும். இன்று தலைவலிக்கான வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இது உங்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு இன்று கேளிக்கையில் மனம் ஈடுபட தூண்டும். கெட்ட சகவாசங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 3. அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.