இலங்கைக்கு ஆதரவாக 11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கும் என்று சீன தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு சீன அரசு உணவு போன்ற உதவிப்பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை நாட்டின் பள்ளிக்கூட குழந்தைகளுக்கு உணவு திட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும் என சீனா தெரிவித்துள்ளது. இந்த உதவி பொருட்களை இலங்கையின் கல்வி அமைச்சகத்திடம் அந்நாட்டிலுள்ள சீன தூதரக அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதன் மூலமாக இலங்கையில் உள்ள 11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கும். மேலும் இலங்கைக்கு 10 ஆயிரம் டன் உணவுப்பொருட்களை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.