பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடை பெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கல்வித் துறை அமைச்சர் பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை மேற்கொண்டது. இதில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சி, தங்கம் ஆகியவையும் சிக்கியுள்ளன. இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறை அதிரடியாக கைது செய்துள்ளது.