தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.