2020ஆம் ஆண்டுக்கான 68ஆவது தேசிய விருதுகள் மாலை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழில் இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று
சிறந்த நடிகர்- சூர்யா
சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி
சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார்
சிறந்த திரைக்கதை- சுதா கோங்கரா
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் பயிற்சி காட்சிகள் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தானு தனது ட்விட்டர் பக்கத்தில்,தேசிய விருது வென்ற தம்பி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாடிவாசல் திரைப்படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி பெற்ற காட்சிகள் வெளியிடுகிறோம் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.