ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 17 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இருக்கும் ஃபர்ஸ்என்னும் மாகாணத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அம்மாகாணத்தின் ரவுட்பெல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு நதியின் கரையோரத்தில் இருந்த வீடுகள் மற்றும் சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த வெள்ளப்பெருக்கில் மாட்டி 17 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டு வருகிறார்கள். இந்நிலையில், வானிலை ஆய்வு மையமானது நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருக்கிறது.