ஈரோடு ரயில் நிலையத்தில் நாளை அதாவது ஜூலை 24ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதனால் சில முக்கிய ரயில்களின் சேவை மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது மட்டுமல்லாமல் சில ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், கரூர் வழியாக செல்லும் ரயில்கள் விபரம், மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16232) , மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) ஆகிய ரயில்கள் நாளை முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை 21 நாட்கள், வாஸ்கோடகாமா – நாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் (17315) வரும் ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 1, 8-ம் தேதிகளில், ஸ்ரீ மட்டா வைஸ்னோ தேவி கட்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஜூலை 28 மற்றும் மற்றும் ஆகஸ்ட் 5, 11 தேதிகளிலும், சண்டிகார் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (12688) ஜூலை 25, ஜூலை 29, ஆகஸ்ட் 1,5,8,12 ஆகிய தேதிகளில் ஈரோடு வழியாக செல்லாது.
அதனை போல ஓகா – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்(19568) ஜூலை 29, ஆகஸ்ட் 5,12-ம் தேதிகளிலும், கச்சிகுடா – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (17615) ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 6,13-ம் தேதிகளில் ஈரோடு ரயில் நிலையம் செல்லாமல் சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும். மறு மார்க்கத்தில் ஈரோடு செல்லாமல் கரூர், நாமக்கல் ,சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் விபரம், தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16235) நாளை முதல் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை 21 நாட்கள், திருநெல்வேலி – ஸ்ரீ மட்டா வைஷ்னோ தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் ரயில் (16787) வரும் திங்கட்கிழமை மற்றும் அடுத்த மாதம் 1,8-ம் தேதிகளில், மதுரை – சண்டிகார் எக்ஸ்பிரஸ் ரயில் (12687) வரும் 27,31 ஆகிய தேதிகள் மற்றும் அடுத்த ஆகஸ்ட் 3,7,10,14-ம் தேதிகளில், தூத்துக்குடி – ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் (19567) ஜூலை 24 மற்றும் 31-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஈரோடு வழியாக இயக்கப்படாது.
நாகப்பட்டினம் – வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் (17316) வருகிற 27 ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 3,10-ம் தேதிகளில், மதுரை – கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில் (17616) வரும் 31-ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 7,14-ம் தேதிகளில், மயிலாடுதுறை – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16231) நாளை முதல் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஈரோடு வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விபரம்.
ஈரோடு – ஜோலார்பேட்டை தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06846) ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டை – ஈரோடு தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06845) 22 நாளுக்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும், ஈரோடு – மேட்டூர் டேம் தினசரி முன்பதிவுல்லா சிறப்பு ரயில் (06407), மறு மார்க்கத்தில் செல்லும் மேட்டூர் டேம் – ஈரோடு தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06408) ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் ஈரோட்டில் ஏறவோ அல்லது இறங்கவோ திட்டமிடப்பட்டுள்ளவர்களுக்கு செல்போன் எண்களுக்கு சேவைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல் அனுப்பப்படும், மேலும் கீழே குறிப்பிட்டுள்ளபடி சேலம் ,ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ரயில் நிலையங்களில் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன, சேலம் -0427-2330194, ஈரோடு-0424 2284812, கரூர்-0432 4232139 மேற்கண்ட உதவி தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.