ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான நளினி தன்னை சட்ட விரோத காவலில் வைத்து இருப்பதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் , தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற்றியது தொடர்பாகவும், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தொடர்பாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது பதில் கடிதம் எழுதப்பட்டு விட்டதாகவும் அதை தமிழக அரசுக்கு 2018 அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த கடிதத்தின் நகல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
அதன்படி இன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் தாக்கல் செய்துள்ள ஒரு ஒரு பதில் மனுவில், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை நிராகரித்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியதாகவும் , தற்போது ஆளுநரிடம் பேரறிவாளன் கருணை மனு நிலுவையில் இருப்பதால் அதை ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். சட்டப்படி , சுதந்திரமாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என தெரிவித்ததோடு நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட்து.