Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் மாத்திக் கொடுத்ததால் ஆத்திரம்…… வெயிட்டருக்கு நேர்ந்த கதி….. பரபரப்பு சம்பவம்…..!!!!

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள 3 ஸ்டார் ஹோட்டலில் ஜெகதீஷ் ஜலால்(42) என்பவர் வெயிட்டராக பணியாற்றுகிறார். இவருக்கும் அதே ஹோட்டலில் பணியாற்றும் மாதவ் மண்டலுக்கும்(27) இடையே அடிக்கடி வாய்தகராறு நடந்துள்ளது. நேற்று இரவு, வாடிக்கையாளர் கொடுத்த ஆர்டரை மாற்றிக்கொடுக்கும் படி, ஜெகதீஷ், மாதவ்விடம் கேட்டுள்ளார். ஆர்டர் மாற்றிக்கொடுத்ததால் இருவருக்கும் அப்போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு எழுந்தவுடன் மாதவ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஜெகதீஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து வந்த போலிஸார் உடலை மீட்டு மாதவ் மண்டலைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Categories

Tech |