இந்தியன் வங்கியில் உள்ள Information Technology துறையில் காலியாக உள்ள Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Consultant கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Management பாடப்பிரிவில் IT, B.E, B.Tech, MCA அல்லது Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்தியன் வங்கி அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் Senior Level பணிகள் அல்லது Head Incharger பணியில் குறைந்தது 05 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Consultant வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 62 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
இந்தியன் வங்கி சம்பளம்:
Consultant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Consultant தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்தியன் வங்கி விண்ணப்ப கட்டணம்:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Consultant விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (01.08.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
General Manager (CDO),
Indian Bank Corporate Office,
HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai,
Royapettah, Chennai,
Tamil Nadu – 600 014.