முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு டெல்லி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதே போன்று 200 யூனிட் வரை இலவச மின்சாரமும் மக்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. 200 முதல் 400 யூனிட் மின்சாரத்திற்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் தரமுள்ள இலவச கல்வியை பெரும் வகையில் அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. இந்நிலையில் கெஜ்ரிவால் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன்படி வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் மேம்பட்ட தகவல் தொடர்பு திறன் பெறுதல் மற்றும் பணி வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் நோக்கில் இலவச ஆங்கிலம் பேசும் பயிற்சி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் படி 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் முன்வைப்புத் தொகையாக 950 செலுத்தி பயன் பெறலாம். இந்த முன் வைப்பு தொகை பயிற்சி முடிந்தவுடன் திருப்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.