Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டும்…. மத்திய அமைச்சருக்கு கோரிக்கை…!!!

மத்திய ரயில்வே அமைச்சருக்கு தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசகர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவரும், தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினருமான கே.என் பாஷா மத்திய ரயில்வே மந்திரி வைஷ்ணவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் ஈரோட்டின்  பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் தந்தை பெரியார்.

இவரை  பெருமைப்படுத்தும் விதமாக ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்ட ரயில்வே நிலையத்திற்கு தியாகி குமரன் பெயரையும், சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரையும் வைக்கப் பட்டுள்ளது. அதேபோன்று தந்தை பெரியாரையும் கௌரவப் படுத்த வேண்டுமென குறிப்பிடப் பட்டுள்ளது.

Categories

Tech |