தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் நாளை நெல்லை – பிலாஸ்பூர் ரயில் (எண்- 22620) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாக்பூர் கோட்டம் கலம்னா ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நெல்லை – பிலாஸ்பூர் ரயில் நாளை ஒரு நாள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.