வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள், குருவை சாகுபடி மாற்றுப் பயிர்கள் மானியத் திட்ட உதவிகள், வேளாண்மை எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அமைச்சர்கள் 3 பேரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார.
இதில் அமைச்சர் கே.என் நேரு, நரிக்குறவர் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 10 நபர்களுக்கு ரூபாய் 50,000 கடன் உதவியும், 59 நரிக்குறவ மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், 3175 பேருக்கு 11 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், காவிரியில் இருந்து 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கொள்ளிடம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 28 ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதனையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், 1 லட்சம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், 2-ம் பட்ஜெட் தாக்கலின் போது 50,000 இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், பயிர் காப்பீடு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது என்றும், பயிர் காப்பீட்டில் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது எனவும் கூறினார்.