Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“வெறும் 100 ரூபாயால்” 100000 அபராதம் ,37 ஆண்டுகள் சிறை தண்டனையைப் பெற்ற இளைஞர்!

கள்ளநோட்டு மாற்ற முயன்ற வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தையில் 100 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் முயன்றுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் முத்து ராமலிங்கம், கள்ளநோட்டு மாற்ற முயன்ற சுதர்ஷனை கைது செய்தார். அவரிடமிருந்த கலர் ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கயல்விழி, சுதர்சனுக்கு 37 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சனை வேலூர் மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Categories

Tech |