நீச்சல் குளத்தில் திடீரென தோன்றிய பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் கார்மேய் யூசெப் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நீச்சல் குளத்தில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த குளத்தில் திடீரென தோன்றிய குழிக்குள் 30 வயதுடைய இளைஞர் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை நீண்ட நேர தேடியுள்ளனர். பிறகு நீச்சல் குளத்தின் கீழே இருந்த 49 அடி ஆழ சுரங்க பாதையிலிருந்து அந்த நபரின் உடலை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.