திருப்பூர் அருகே ரயிலில் போலீஸ்சார் சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள்.
தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படி இருந்த ஒரு இளைஞனிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை இட்டார்கள். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இளைஞரை கைது செய்து திருப்பூர் ரயில்வே போலீஸ்சார் சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் ஒப்படைத்தார்கள். பின் அவரிடம் விசாரணை செய்ததில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சதானந்தா படேய் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இளைஞரை கைது செய்து அவரிடமிருந்த ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தார்கள்.