மதுபோதையில் கத்திரிக்கோலால் மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். டெய்லரான இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுஜிதா, இனியதர்ஷினி, வர்ஷினி என்ற 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை கற்பகம் கண்டித்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கற்பகம் ஈரோட்டில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு கருப்பையாவை அழைத்துச் சென்று மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்பதற்காக மந்திரித்து கயிறு கட்டியிருந்தார்.
இந்நிலையில் இரவு மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கற்பகம் கண்டித்துள்ளார். அப்போது கருப்பையா கற்பகத்திடம் ‘மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கு நீ யார்?’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா வீட்டிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து கற்பகத்தின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கற்பகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கற்பகத்தின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.