தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சார்பில் பல்வேறு பட்ட படிப்புகளுக்கான சேர்க்கை வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த வருடம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு ஆகிய பாடப்பிரிவுகளிள் இளநிலை பட்டப்படிப்புகள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.