Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மகனை சமாதானப்படுத்திய ஆசிரியர்” வேலைக்கு சென்ற பின் நடந்த சம்பவம்…. கதறிய பெற்றோர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் மீனவரான அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபின் மேரி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் கிளின்டன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகனான ரூபிக்சன் காஸ்ட்ரோ என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக மாணவன் தனது தாயிடம் படிப்பு சரியாக புரியவில்லை என கூறியுள்ளார். அதனை பெரிதாக எடுத்து கொள்ளாதே என மேரி தனது மகனை சமாதானப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் மேரி வேலைக்கு சென்ற பிறகு அலெக்ஸ் தனது மகனை சாப்பிடுவதற்கு அழைத்துள்ளார். அப்போது சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு மாணவர் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த மேரி ரூபிக்சன் காஸ்ட்ரோ குறித்து தனது கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது மகன் வெளியே சென்றதாக அலெக்ஸ் கூறியுள்ளார். ஆனால் மாணவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு ஆகியவை வீட்டிற்கு வெளியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த மேரி வீடு முழுவதும் மகனை தேடி பார்த்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் அறையில் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து மேரி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |