தந்தையை கொலை செய்த வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு திருமன் தோட்டம் பகுதியில் குமரேசன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முருகேஷ்(31) என்பவர் கேரளாவில் இரும்பு பீரோ தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
அப்போது என்னிடம் பணம் இல்லை; யாரிடமாவது வாங்கி தருகிறேன் என குமரேசன் கூறியுள்ளார். ஆனால் அதன்படி குமரேசன் பணம் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த முருகேஷ் தனது தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி முருகேசுக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.