Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக பிரபலங்கள்…. நடிகர்கள் ரஜினி, கமல் பாராட்டு…. செம வைரல்….!!!

தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்களுக்கு உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் 2020-ம் ஆண்டுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், பின்னணி இசை, மற்றும் திரைக்கதை என 5 விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை பெற்ற நடிகர்-நடிகைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்‌, சூரரைப் போற்று படம் 5 தேசிய விருதுகளை பெற்றது பெருமை அளிக்கிறது என்றும், மண்டேலா மற்றும் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட படங்களை சேர்த்து மொத்தம் 10 தேசிய விருதுகளை பெற்று தேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா மற்றும் சூரரைப்போற்று படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும், விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் எனவும் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |